தமிழக உறவுகளே! ஓட்டுப் போடமுன் ஒரு நிமிடம்...!
நம் ஈழ மக்களின் துன்பங்களை, சொந்த மண்ணிலேயே அகதிகளாகி அவர்கள் படும் அவலங்களை வார்த்தைகளில் வரித்துவிடும் வல்லமை எழுத்துக்களுக்கு கிடையாது. ஆனாலும் சொல்லியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் மனந்திறந்த வரிகளோடு முயற்சிக்கின்றேன்... மனம் நிறைந்த வலிகளுடன்.
கொலைவெறிச் சிங்களத்தின் கொடூரக் கரங்களுக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகின்றது ஈழதேசம். வளம் நிறைந்த நம் மண் இன்று குண்டுமழையில் குளித்து நம் உறவுகளின் குருதியில் சிவந்துபோய்க் கிடக்கின்றது. நம் வாழ்விடங்கள் எல்லாம் பாழாக்கப்பட்டு அங்கு பாம்பும் பகையும்தான் குடியிருக்கின்றன.
வாரிக்கொடுத்த கைகளெல்லாம் அறுத்தெறியப்பட்டு அநாதரவாய் தெருவில் சிதறிக் கிடக்கின்றன. ஓடியுழைத்த கால்களெல்லாம் ஒடிக்கப்பட்டு ஊனமாகி திராணியற்று நிற்கின்றனர் நம் ஈழ உறவுகள்.கொடுத்தே பழகிய அந்தக் கரங்கள் இன்று கையேந்தி நிற்கின்றன ஒரு நேர கஞ்சிக்காக...!
பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல் துண்டு துண்டாய் பிய்த்தெறிகின்றன எறிகணைகள். கருவில் வளரும் தளிரைக் கூட அவை விட்டு வைக்கவில்லை . எறிகணைகளுக்குத்தான் தெரியுமா அவை பிஞ்சா தளிரா என்று? கற்புக்கே கற்பு கற்பிக்கும் ஈழத்தின் பெண்மை அங்கு சீரழிக்கப்படுகிறது.சிங்கள இராணுவத்தினால் கதறக் கதற கற்பழிக்கப்படும் பெண்கள் படும் கொடுமையை கல்நெஞ்சம் கொண்டவர்கூட கண்கொடுத்து பார்க்கமாட்டார். கற்பழிப்பு , காணாமல்போதல், சித்திரவதைகள், படுகொலைகள், பட்டினிச்சாவு, பதுங்குகுழி வாழ்வு என்பவைதான் ஈழத்தமிழரின் இன்றைய உடைமைகள். என்ன கொடுமையிது !!!
ஈழ உறவுகளின் அழுகுரலில் ஆர்ப்பரிக்கின்றது வங்கக்கடல். அவலந்தந்த கண்ணீரில் மூழ்கின்றது முல்லைக் கடல். வந்தோரை வரவேற்று வாழவைக்கும் வன்னிமண், பேரவலம் வந்தேறி பரிதவித்து நிற்கின்றது . வீரம் செறிந்த அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் இது சோதனைக் காலம். பெருந்துயர்படிந்த வேதனைக் கோலம்.
பேரன்புமிக்க தமிழக உறவுகளே! உங்கள் உறவுகளுக்கு இப் பேரவலத்தினைக் கொடுத்த அந்த பாவிகள் யார்?
சிங்களம் என்றுதான் பதில் வரும். உண்மைதான்! ஆனால் சிங்களம் மட்டுமல்ல. சிங்கள வல்லாதிக்கத்துடன் கூட்டுச்சேர்ந்த பல சக்திகளுங்கூட. அதில் பிரதானமாய் இந்தியா இருப்பது நமக்கெல்லாம் பேரதிர்ச்சி. நம் துயர்துடைக்கும் என்று நாம் நம்பியிருந்த இந்தியாவே நம் உறவுகளை அழிக்க பேராதரவு கொடுத்து நிற்கின்றது சிங்கள அரசிற்கு.
எங்கள் அவலங்களைப் பார்த்து தாங்கொணாமல் நீங்கள் துடிப்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகின்றது பாசமிகு தமிழக உறவுகளே!
தினந்தினம் அநியாயமாய் செத்து மடியும் ஈழத்தமிழ் உறவுகளின் பிணங்களைப் பார்த்து நீங்கள் பதைபதைப்பது நம் கண்களில் தெரிகின்றது. தானாடாவிட்டாலும் தசையாடும் என்பார்கள். தமிழீழத்தின் பிஞ்சுக் குழந்தைகளின் சிதறிய உடல்களைப் பார்த்து கல்நெஞ்சங்கள் கூட கரைந்துதான் போயின. உணர்வுள்ள உங்கள் உள்ளங்கள் உடைந்து வெதும்பின. கண்ணீர் கொப்பளிக்க கதறியழுத ஈரமான உள்ளங்கள் எத்தனையோ. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களையே தீயிற்கு ஆகுதியாக்கிய முத்துக்குமார் வழிநடந்த தியாகவீரர்கள் பலர். ஆர்ப்பாட்டங்கள் ,பேரணிகள்,மனிதச்சங்கிலிகள்,உண்ணாவிரதங்கள் என சாதாரண மக்களாக உங்கள் ஈழ உறவுகளின் அவலம் நீக்க, போரை நிறுத்தக்கோரி நீங்கள் செய்த அத்தனைக்கும் நாம் தலை வணங்குகின்றோம்.உங்கள் ஆதரவும் அன்பும் உணர்வும் எங்களுக்கு நன்கே புரியும். அவலத்தின்மேல் அவலப்பட்ட மக்களுக்கு உங்கள் ஆதரவு எரியும் நெருப்பை அணைக்கும் நீராய்த் தோன்றியது. ஆனாலும் சிங்கள வல்லாதிக்கத்தின் பிடிவாதமான போர்வெறியும், தமிழுணர்வுக்கு துளியும் மதிப்புக் கொடுக்காத காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசின் பழிதீர்க்கும் மனப்பாங்கும் சேர்ந்து, உங்கள் போராட்டங்களையெல்லாம் வீணாக்கி விட்டன. உங்களது போராட்டங்களால் விடியல் வரும் என்று காத்திருந்த ஈழத்தமிழருக்கு அவை கானல் நீராகவே போயின.
எதைக்கேட்டாலும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையையே புராணம் பாடும் இந்த காந்திய காங்கிரஸ். கங்கிரஸாரிற்கு அதைவிட்டால் வேறு காரணங்கள் கிடையாது. அன்று புலிகள்தான் செய்தார்கள் என்று தாமாகவே முடிவுசெய்த காந்திய காங்கிரஸ், இன்று அதற்கு பழிதீர்க்க அனைத்து தமிழருக்கும் முடிவுகட்ட முண்டியடித்து நிற்கின்றது சிங்களதேசத்துடன், இந்திய அரசு என்னும் அதிகாரத்தோடு. இந்த அதிகாரத்தினை அவர்களுக்கு கொடுத்தவர்கள் நீங்கள்தான் தமிழக உறவுகளே! கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் அளித்த நாற்பதுக்கு நாற்பது ஆசனங்கள்தான் அவர்களை மத்தியில் அதிகார ஆசனத்தில் அமரவைத்தது. ஆனால் நீங்கள் விடுத்த கோரிக்கைகளையெல்லாம் குப்பையில் தூக்கிப் போட்டார்கள். கேட்டும் கேளாமல் இருந்தார்கள். சில சமயங்களில் செவிசாய்ப்பதுபோல் நாடகமாடினார்கள். இந்த நிமிடம் வரைக்கும் உங்கள் உறவுகளுக்கான உங்கள் கோரிக்கைகளுக்கு எதிராகவே நடந்து வருகின்றார்கள்.
தன்னை "தமிழினத் தலைவர்" என சொல்லிக் கொள்ளும் மான்புமிகு தலைவர்களும் அதற்கு உடந்தையாக இருந்தது மிகவும் வேதனைக்குரியது. எதிர்பார்ப்புக்களைக் கொடுத்து ஏமாற்றினார்கள் தம் சுயநலங்களுக்காக. பணத்துக்காகவும் பதவிக்காகவும் உங்கள் ஈழ உறவுகளின் உயிர்களை ஏலம்விட்டார்கள்.தம் குடும்ப நலன்களுக்காக ஈழத்தமிழர் ஒட்டுமொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை என கைகழுவி விட்டார்கள். பதவி விலகல்கள், தந்திகள், கட்சிக் கூட்டங்கள், உண்ணாவிரதம் என பலவிதமான கபட நாடகங்களை அரங்கேற்றினார்கள்.இப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் தீர்ப்பு வழங்க நல்லதொரு சந்தர்ப்பம் உங்கள் முன்றலிலேயே வந்து நிற்கின்றது.
தமிழகம் மீண்டுமொருமுறை நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராகிவிட்டது. இத்தேர்தல் முடிவில் அவலப்படும் ஈழத்தமிழினத்தின் வாழ்வும் தாழ்வும் அடங்கியிருக்கின்றது என்பது தமிழக உறவுகள் நீங்கள் அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்.மீண்டுமொருமுறை காங்கிரஸ் அரசமைக்க நீங்கள் அங்கீகாரம் கொடுப்பீர்களானால் அது ஈழத் தமிழினத்தினை அழித்தொழிக்க நீங்களே அனுமதி கொடுப்பதற்கு சமனாகும்.
சர்வதேசமெங்கும் ஈழ ஆதரவு பெருகிவருகையில் அவற்றின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிற்கு முட்டுக்கட்டை போடுவதே காங்கிரஸ் அரசுதான். காங்கிரஸின் தமிழின எதிர்ப்புக் கொள்கைகளுக்குள் தமிழகமும் அடக்கப்பட்டு அடங்கிப்போகும் நிலைக்கு தள்ளப்படும்.எனவே,
தமிழினத்துக்கு எதிராகவே எப்பொழுதும் கொள்கை வகுக்கும் காங்கிரஸிற்கு இந்த முறை தகுந்த பாடம் புகட்டுங்கள் தமிழக உறவுகளே!
இவ்வளவு காலமும் கட்சிக்காக ஓட்டுப் போட்டீர்கள்! சாதிக்காக ஓட்டுப் போட்டீர்கள்! மதத்துக்காக ஓட்டுப்போட்டீர்கள்! சலுகைகளுக்காக ஓட்டுப் போட்டீர்கள்! அப்போதெல்லாம் மாறுதல்களோ நன்மாற்றங்களோ வந்ததாக தெரியவில்லை. இம்முறை உங்கள் இனத்துக்காக ஓட்டுப் போடுங்கள்! உங்கள் உறவுகளின் கண்ணீரைத் துடைத்த புண்ணியமாவது உங்களுக்குக் கிடைக்கும்.
ஓட்டுப் போடுவதற்குமுன், சொல்லொணா துயரத்தில் ஏக்கத்துடன் தவிக்கும் ஈழ மக்களின் கண்ணீர் தோய்ந்த முகத்தினை ஒரு தடவை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.உங்கள் மனச்சாட்சியை தொட்டுப் பார்த்து மனிதநேயம் மிக்க மனிதன் என்ற ரீதியில் வாக்களியுங்கள்.
தமிழினம் சாதாரணமான ஒரு இனம் அல்ல. உலக வரலாற்றில் சரித்திரம் படைத்ததும் தொன்றுதொட்டே மேன்மையானதுமான ஒரு இனம். அப்படிப்பட்ட சிறப்புமிக்க தமிழினத்தினை அழிக்க பலவழிகளில் முயல்கின்றன பல நாசகார சக்திகள்.
முதலில் ஈழ தமிழரை குறிவைத்திருக்கும் அந்த நாசகார சக்திகளின் அடுத்த இலக்கு உங்களை நோக்கியும் திரும்பும் எம் தமிழ் தமிழக உறவுகளே!
குறிப்பிட்ட ஒரு கட்சிக்குத்தான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டும் என்று வற்புறுத்தவில்லை.தமிழின எதிர்ப்புக் காங்கிரஸும் அதன் கூட்டணியும் அல்லாமல் எதற்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்பது கங்கிரஸின் துரோகத்தனத்தினால் செத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் எதிர்பார்ப்பும் பணிவான வேண்டுதலும் ஆகும்.
தமிழக அன்புள்ளங்களே! நாங்கள் உங்களை முழுமையாக நம்புகின்றோம். உங்கள் சொந்தங்கள் அழிக்கப்படுவதைப் பார்த்து துடிதெழுந்தவர்கள் நீங்கள்! உங்கள் உணர்வுகளுக்குமுன் அரசியல் கபட நாடகங்கள், சதிகள் ஜெயிக்காது. ஜெயிக்கவும் விடமாட்டீர்கள் என்பது உறுதி!
ஈழ மக்களின் அவலங்களைப் பார்த்து உருவான உங்களின் மனப்பாரங்களை வாக்குப் பெட்டிகளில் இறக்கிவையுங்கள், காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான வாக்குகளாய்...!
புலம்பெயர் தேசத்திலிருந்து,
ஒரு ஈழத்தமிழன்,
[பருத்தியன்]
Saturday, May 9, 2009
Friday, May 8, 2009
உலகத் தமிழரிடமிருந்து தமிழக வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்

தமிழக வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
பேரன்புடையீர்,
அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்த ஈழத்தின் வன்னித்தமிழ் மக்களின் வாழ்வியலை முழுமையாகச் சிதைத்து சின்னாபின்னப்படுத்திமிகப்பெரிய மனித அவலத்தில் அவர்களை பலவந்தமாகத்தள்ளியதில் திருமதி சோனியாகாந்தி அம்மையாரின் தலைமையிலான காங்கிரசுக் கட்சிக்கு பெரும் பங்குண்டு.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வாசகத்ததைப் பயன் படுத்தி முழுத்தமிழினத்தையே அழிக்க திருமதி சோனியாகாந்தி அம்மையார் எடுத்த முடிவு சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான ஓர் இனப்படுகொலையென்பதை
சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிக்கவும் போதிய சந்தர்ப்பம் உண்டு.
உலகிலுள்ள 9 கோடித் தமிழ்மக்களும் விடுத்த அனைத்து வேண்டுகோள்களையும்நிராகரித்த காங்கிரசுக் கட்சி தொடச்சியாக ஈழத்தமிழினத்தை கொலைசெய்யும் சிறிலங்கா அரசுக்கு பக்கபலமாக நிற்பது தவறு என்பதைச் சுட்டிக்காட்ட தமிழக வாக்காளர்களுக்கு அரியசந்தர்ப்பமாக மே 13ம்திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தல் வாய்த்துள்ளது.
தமிழின உணர்வாளர்களே காங்கிரசுக்கட்சிக்கு நீங்கள் வாக்களிக்காமல் விடுவதன்மூலம் திருமதி சோனியாகாந்தி அம்மையாரின் முடிவு தவறானது என்பதைப் புரியவைக்க முடியும்.
தமிழ் நாட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு காங்கிரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர்கூட இம்முறைதேர்ந்தெடுக்கப்படக்கூடாதென்பதே உலகத்தமிழனித்தின் வேண்டுகோளாகும்.
தமிழ்நாட்டுமக்களின் தீர்ப்பையறிய பல நாடுகள் மாத்திரமல்ல ஐக்கியநாடுகள்சபையும் ஆவலாக இருக்கிறதென்பதை கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
வேண்டுகோளைவிடுக்கும் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்கள் வருமாறு:-
1.உலகத்தமிழ்ப் பண்பாட்டியக்கம் ஐரோப்பிய ஒன்றியம் ( பதிவு இல:VR.1116)
2.புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றியம் யேர்மனி (பதிவு இல:- (VR.757)
3.தமிழர் கலாச்சார நற்பணி மன்றம் யேர்மனி (பதிவு: VR.296)
4.சர்வதேசப் புலம்பெயர் தமிழ்எழுத்தாளர் ஒன்றியம் (பதிவு:-VR.5895)
5.தமிழ்மன்றம் யேர்மனி (பதிவு VR-9746)
6..ஈழத்தமிழர் நலன்புரிக்கழகம் யேர்மனி (பதிவு-VR 10369)
7.பாரதிகலைக்கூடம் யேர்மனி (பதிவு-VR-4862)
8.தமிழர் ஒன்றியம் யேர்மனி (VR-10012)
matrum or Manamulla Tamilga thamilan
Eelaa thamilargalin unmai nilai
En uravugale, Please understand the Tamils of Eelaam, this motion picture Directly hits the truth, This is real and true position of People in Eelaam, save our bloods, Great Thanks to Vijay tv and PremGopal thavipudan Thamilan
Thursday, May 7, 2009
வன்னி மக்களை பட்டினி அவலத்திலிருந்து காப்பாற்றுங்கள் - An Appeal to the Tamil Youngsters
My dear Tamil youngsters,
Daily we are spending money in many ways, wasting the money and loosing our energy. But our people in Tamileelam suffering every day there in many ways, but presently they are also suffering and longing for food and grains. pls consider the children in Tamileelam. my dear youngstrers this is an appeal to all of you pls donate the money and food grains and compell the world nations and UNO to save our blood relatives.Find some fruitful sources which will save our blood.
anbudan,
Thamilan.
Evidence :

வன்னியில் உள்ள மக்கள் பாரிய பட்டினிச்சாவை எதிர்நோக்கி உள்ளதால், அவர்களை பட்டினியில் இருந்து காப்பாற்றுவதற்கு சர்வதேச சமுகம் மற்றும் மனிதநேய அமைப்புகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தினால் வன்னியில் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயப் பகுதியில் தற்போதும் ஒரு இலட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் உள்ள மக்கள் மீது சிறிலங்கா படையினர் உக்கிரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் தினமும் பல பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதுடன் பெருந்தொகையானோர் காயமடைந்தும் வருகின்றனர். இதை சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா போன்றவை உறுதிசெய்தும் உள்ளன.
ஐ.நாவினால் அண்மையில் வெளியிடப்பட்ட செய்மதிப் படத்தின் மூலம் இது மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. படையினர் இப்பகுதி மீது கொத்தணிக் குண்டுகள் மற்றும் எரிகுண்டுகள் என்பனவற்றைப் பயன்படுத்தியும் கனரக ஆயுதங்களைக் கொண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நேற்றைய தினம் (06.05.2009) குண்டுத் தாக்குதலுக்குப் பயந்து அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றுக்குக் கீழ் பாதுகாப்புக்காக ஒழிந்திருந்தவர்கள் மீது எரிகுண்டு வந்து வீழ்ந்ததில் 14 பேர் வரையில் கருகி மரணமடைந்துள்ளனர். இதுபோல் தினமும் பல சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன.
இந்த நிலையில் தற்போது அங்கு உணவுப் பொருட்கள் ஏதுமற்ற நிலையில் கடுமையான பட்டினி ஏற்பட்டுள்ளது. மக்கள் உணவுக்காக அங்குமிங்கும் அலைந்தும் எந்த உணவும் இல்லாததால் பலர் மயக்கமடைந்த நிலையில் உள்ளனர். சிலர் பட்டினியால் உயிரிழந்தும் வருகின்றனர்.
சிறிலங்கா அரசாங்கம் அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகளை அனுப்பாது தொடர்ந்து தடை செய்து வருகின்றது. இதனால் பாரிய மனித அவலம் ஏற்பட்டுள்ளது. கடந்த சித்திரை மாதம் முற்பகுதியில் சிறு தொகை உணவுப் பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் அதன் பின்னர் எந்தவகையான உணவுப் பொருட்களும் அங்கு சென்றடையவில்லை. ஏற்கனவே ஒரு வேளை கஞ்சியையாவது அருந்தி வந்த மக்கள் தற்போது அதுவுமின்றி உணவுக்காக அலைகின்றனர்.
நீண்ட நாட்களுக்கு முன்னர் அங்கு இயங்கிய அரிசி ஆலைகளில் நிலத்தில் குவிந்து கிடக்கும் அரிசித்தவிட்டை அவர்கள் சேகரித்து அதைக் கரைத்துக் குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்றும் ஏதாவது இலைவகைகள், தென்னை, பனை வடலிகளின் குருத்து என்பனவற்றை வெட்டி எடுத்தும் சாப்பிட வேண்டிய பரிதாபகரமான நிலை தோன்றியுள்ளது.
இந்த பட்டினி அவலத்தை சர்வதேச நாடுகள், அந்நாடுகளில் இருந்து கொழும்புக்குச் சென்ற பிரமுகர்கள், சர்வதேச சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா போன்றவற்றுக்குத் தொடர்ந்து தெரியப்படுத்தி வருகின்றபோதிலும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
எனவே சிறிலங்கா அரசின் பொய் பிரச்சாரத்தை சர்வதேச நாடுகள் மற்றும் மனித நேய அமைப்புகள் கவனத்தில் கொள்ளாது அங்குள்ள உண்மை நிலையினைக் கண்டறிய பாதுகாப்பு வலயத்திற்கு ஒரு குழுவை அனுப்புவதுடன் தற்போது ஏற்பட்டுள்ள பாரதூரமான பட்டினியைப் போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கும் சிறீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவிக்காத பட்சத்தில் விமான மூலமாகவேனும் அப்பகுதிக்குள் உணவுப் பொருட்களை போடுவதற்கு உரிய ஏற்பாடுகளைச் சம்பந்தப்பட்ட உலக நாடுகள் மற்றும் பொது அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வதேச சமுகம், ஐ.நா மற்றும் பொது அமைப்புகளின் மௌனமும் தாமதமும் சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழின படுகொலையை ஆதரிப்பது போலும் அதற்கு கால அவகாசம் வழங்குவது போலும் உள்ளதாகவே எமக்குத் தென்படுகின்றது.
எனவே சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிடின் வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் ஏற்பட்டுள்ள பட்டினிச்சாவு மேலும் அதிகரித்து பாரிய அவலம் ஏற்படவே வழிகோலும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Friday, May 1, 2009
example of genocide

இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள்.பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம்.
இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது உத்தரவாதம் தான் தர முடியுமா ? . இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ? இராணுவத்தின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நன்பர் ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார். இல்லையேல் இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை.
புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில் சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால் அடைப்பது.

Thanks to Athirvu .com
by Tamilan
tamilargale eeramillaya

Anbumikka tamilargale, thayavu seithu kan kondu parungal, veru yarukkagavaum illai enralum intha entharumai kulanthaikalukagavathu satru ungal kadaikan parvaiyai thiruppungal
Ayya namathu kulanthaikali kakka varungal,
தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்.. நடைப்பிணமாக ஈழக் குழந்தைகள்!: ஜுனியர் விகடன்
[ வெள்ளிக்கிழமை, 01 மே 2009, 05:18.59 AM GMT +05:30 ]
கன்னங்கள் வற்றிப்போய் எலும்பும் தோலுமான அந்தக் குழந்தைகள் செய்த ஒரே தவறு. தமிழ் வயிற்றில் தரித்தது தான்! சோமாலியக் குழந்தைகளை விட மோசமாக வயிறு ஒட்டிப்போய்க் கிடக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் இன்று சாவின் நுனியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்... உறவுகளைப் பற்றி நினைக்கக்கூட சுவாதீனமில்லாமல் வயிற்றைத் தடவும் பசிக் குரல்கள்... எங்கே போவதெனத் தெரியாமல் பிரமை பிடித்து அலையும் பரிதாபங்கள்.. என ஈழம், இன்று மரணக் கேணி ஆகியிருக்கிறது.
பன்னாட்டு அமைதி அமைப்புகளும் ஈழத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்கொடூரத்தை பகிரங்கமாகக் கண்டித்திருக்கின்றன. ஆனால், சிங்கள இராணுவத்தின் வெறிகொண்ட கொடூரத் தாக்குதல் சத்தங்களில் அந்தக் குரல்கள் இலங்கை அரசுக்கு கேட்பதே இல்லை!
வவுனியாவில் இருக்கும் சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர் பேசும்போது,
''இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கி இருக்கும் குழந்தைகளில் முக்கால்வாசி பேருக்குக் காது மந்தமாகி விட்டது. தொடர்ந்து ஒலிக்கும் சிங்கள இராணுவ பீரங்கிகளின் கொடும் சத்தம், அவர்களின் செவிப் பறையைப் புண்ணாக்கி விட்டது. மனரீதியாகவும் அந்தக் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டிருக்கின்றன.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மக்கள் கொண்டு வரப்பட்டதுமே உடனடியாக குழந்தைகள் தனியாகவும், பெற்றோர்கள் தனித் தனியாகவும் பிரிக்கப்படுகிறார்கள். பெற்றோரை விட்டுப் பிரிக்கப்படும்போது குழந்தைகள் கதறும் கூக்குரலை, மனச்சாட்சியுள்ள இராணுவத்தினர் சிலராலேயே பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
தனித் தனியாகப் பிரிப்பதன் மூலம் குழந்தைகளைத் தனிமைப்படுத்தும் சிங்கள இராணுவம், அவர்களை கம்பி வேலியிட்ட மைதானத்தில் அடைத்து வைத்திருக்கிறது. நிழலுக்குக் கூட வழியில்லாமல் அல்லாடும் அந்தக் குழந்தைகளுக்கு, ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் உணவு.
கடந்த வாரம் பத்து வயதுச் சிறுவர்கள் இருவர் கம்பி வேலியை வளைத்துத் தப்பிக்க முயன்றபோது, இராணுவத்தினரிடம் பிடிபட்டனர். மொத்தக் குழந்தைகளும் பார்க்க. அந்தச் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான அடி, எல்லோரையும் உலுக்கி விட்டது.
இராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள், மருந்துக்கு வழியில்லாமல் வெயிலில் எரிச்சல் தாளாமல் துடிதுடித்துப் போகிறார்கள். மதிய வேளைகளில் இராணுவத்தினர் வரும்போது, 'ஆமி மாமா, சோறு போடுங்க...' என முகாம் குழந்தைகள் பசி மயக்கத்தோடு ஈனஸ்வரத்தில் கெஞ்சுவதைப் பார்க்கையிலேயே நெஞ்சடைத்து விடும்! பாவம், பசித்த வயிற்றுப் பிஞ்சுகளுக்கு, எமன்களை உறவுகொண்டாடுகிறோம் என எப்படித் தெரியும்?
அதிலும் சில குழந்தைகள், கொடுக்கப்படும் ஒருவேளை சாப்பாட்டையும் கூட வற்புறுத்திக் கொடுத்தாலும், சாப்பிடாமல் பித்துப் பிடித்துத் திரிகின்றன. கொஞ்சம் விவரமான குழந்தைகளைத் தனியே அழைத்துச் செல்லும் இராணுவத்தினர், அவர்களை என்ன செய்கிறார்கள் என்றே தெரிவதில்லை!
அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை என உறவு வழியிலான குழந்தைகளும் கூட அங்கே நெருங்க விடாமல் கெடுபிடி காட்டப்படுகிறது. இராணுவத்தின் நடவடிக்கைகளை ஆழமாகக் கவனித்தால்.. 'இந்தக் குழந்தைகளை மனரீதியாக சிதைத்து பலவீனப்படுத்த வேண்டும்' என்கிற வெறி அப்பட்டமாகத் தெரிகிறது.
வவுனியா மாவட்ட அரச அதிபரான திருமதி சார்ல்ஸ், இந்த உண்மைகளை உலக அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஈழக் குழந்தைகளுக்கு தொடர்ந்து இத்தகைய கதிதான்!'' என்கிறார் வேதனை மேலிட.
தாக்குதலுக்கு ஆளாகிக் கிடக்கும் குழந்தைகள் குறித்து வருகிற செய்திகளோ, இதைவிடக் கொடூரம்..!
''கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே பத்து வயதுக்கு உட்பட்ட நாலாயிரத்துக்கும் மேலான குழந்தைகள் போரில் இறந்திருக்கின்றன! மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், கை-கால்களை இழந்து பெருங்காயங்களோடு அல்லாடிக் கொண்டிருக்கின்றன.
இரத்தத் தொற்று வியாதிகள் பரவி, நிறையக் குழந்தைகள் படுத்த படுக்கையாகி, எப்போது மரணம் சூழுமோ என்ற நிலையில் கிடக்கின்றன. 12 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகள் இராணுவத்தினரால் தேடித்தேடி அழிக்கப்படுகின்றன. 'எதிர்காலத்தில் யாரும் போராளியாக உருவெடுத்துவிடக் கூடாது!' என்பதற்காகத்தான் இப்படி திட்டமிட்டுச் செய்கிறது இராணுவம்.
சிங்களர்களின் அந்தரங்க சொர்க்க புரியாக அரசாலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் அனுராதபுரத்தில், இது நாள் வரை தமிழ் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் இல்லை. ஆனால், இப்போது ஈழத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பதின்மூன்று வயதுப் பெண் குழந்தைகள் பலர், அங்கே விபசார வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒரு சிறுமி, இராணுவத்தினர் தன் மீது கட்டவிழ்த்துவிட்ட காமக் கொடூரங்களையும், வெறித்தனங்களையும் ஒரு கடிதமாக எழுதி வைத்துவிட்டு, இரு வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாள்.
தற்போது முள்ளிவாய்க்கால், இரட்டை வாய்க்கால், சாளம்பன், ஒற்றைப் பனையடி ஆகிய பகுதிகளில் மட்டும் குறைந்தது இரண்டாயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இருக்கிறார்கள்.
'கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்! என உலகை ஏமாற்றி, பீரங்கித் தாக்குதலை வெறிகொண்டு நடத்திக் கொண்டிருக்கும் இராணுவம், மீதமிருக்கும் குழந்தைகளைக் கொல்ல வேண்டிய அவசியமே இல்லை! நாள் ஒன்றுக்கு ஆறாயிரத்துக்கும் அதிகமான அளவில் அங்கே வந்துவிழும் குண்டுகளும், அதன் பெருஞ்சத்தமும், அதிர்வும் மிச்சமிருக்கும் குழந்தைகளை நடைபிணமாக்கி விட்டன.
குண்டு விழும் சத்தம் கேட்டால் கூட இங்கிருக்கும் குழந்தைகள் தப்பி ஓட நினைப்பதில்லை. என்ன நடக்கிறதென்றே தெரியாமல், வெறித்தபடி பித்துப்பிடித்த மனநிலையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்..! என்கிறார்கள் வன்னிப் பிரதேச தமிழ்ப் பிரதிநிதிகள்.
அடுத்த தலைமுறைப் பிஞ்சுகளும் எங்கே உரிமைக் காகப் போராட கிளம்பி விடுமோ என்ற பயத்தில் சிங்கள இராணுவம் நடத்துவது, 'இனப் படுகொலை' மட்டுமல்ல... 'ஈனத்தனமான படுகொலை'யும் கூட!

Subscribe to:
Posts (Atom)