Thursday, November 24, 2011


தங்க தமிழ் தலைவா வாழிய பல்லாண்டு,
உன் வழிகாட்டுதல் ஏன் மகனுக்கும் வேண்டும்தலைவா,
இன்னும் எம்மீது என்ன கோபம், போதும் உன் மறைவு
வாழ்விழந்தோர் வளம் பெற
உன் வார்த்தை ஒன்றாவது காற்றின் வழி வரட்டும்

Friday, June 3, 2011

எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பட்டொளி வீசி பறக்கட்டும்

கல்லறைகள் திறந்து கொண்டன

மடிந்தவர்கள் வருகிறார்கள்

மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன

புகழ் மலர்களோடும், உறுவிய வாளோடும் வருகிறார்கள்

இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி வருகிறார்கள்

ஈழ விடுதலை முரசம் ஒலிக்கட்டும்

ஈழம் உதயமாகட்டும்

சுதந்திர ஈழக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும்

ஆம்; ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு

எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும்

Tuesday, February 22, 2011

புரசந்தார் கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு


புரசந்தார் கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து

அம்மா!
ஈழத் தாயே
வேங்கையை பெற்றெடுத்த பெருந் தாயே!
காலமெலாம் கயமைகளால்
ஞாலமிழந்த எம் ஞாயங்களை
மீளெடுத்து எம்
கோலமெழுதிய கொற்றவனை
தந்தவளே!
ஈன்ற பொழுதை விட பெருமை பெற்றவளே!
உன் மைந்தன் உமக்காற்றிய
ஆழ்ந்த வியத்தகு வீரியங்கள்
புடை சூழ இயற்கையெய்தினாய்.

ஈழத் தாயே
போய் வருக,
நோயின் உபாதைகளின்
உத்திரத்திலிருந்து உறவறுத்து
செத்திலாள் இந்த சேந்தனை பெற்றவள் என்ற
பெரு நிறைவுடன் போய் வருக எம்
பெருந்தகையே.

உங்கள் ஆத்மங்கள் ஓய்வெழுதட்டும்..
ஆன்மா அழகியலாய் அமைதி பெறட்டும்.
திங்களாய் எம் வாசல் வந்தாய்-அம்மா
சிங்களனால் எம் இனம் பெற்ற இன்னல் தீர்க்கும்.
பொன் ஈழ வேந்தனை ஈன்றெடுக்க நீ வருவாய்.
நிச்சயம் நீ வருவாய்.
போய் வா எம் பொற்பாதமே.
பதமே