
புரசந்தார் கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து
அம்மா!
ஈழத் தாயே
வேங்கையை பெற்றெடுத்த பெருந் தாயே!
காலமெலாம் கயமைகளால்
ஞாலமிழந்த எம் ஞாயங்களை
மீளெடுத்து எம்
கோலமெழுதிய கொற்றவனை
தந்தவளே!
ஈன்ற பொழுதை விட பெருமை பெற்றவளே!
உன் மைந்தன் உமக்காற்றிய
ஆழ்ந்த வியத்தகு வீரியங்கள்
புடை சூழ இயற்கையெய்தினாய்.
ஈழத் தாயே
போய் வருக,
நோயின் உபாதைகளின்
உத்திரத்திலிருந்து உறவறுத்து
செத்திலாள் இந்த சேந்தனை பெற்றவள் என்ற
பெரு நிறைவுடன் போய் வருக எம்
பெருந்தகையே.
உங்கள் ஆத்மங்கள் ஓய்வெழுதட்டும்..
ஆன்மா அழகியலாய் அமைதி பெறட்டும்.
திங்களாய் எம் வாசல் வந்தாய்-அம்மா
சிங்களனால் எம் இனம் பெற்ற இன்னல் தீர்க்கும்.
பொன் ஈழ வேந்தனை ஈன்றெடுக்க நீ வருவாய்.
நிச்சயம் நீ வருவாய்.
போய் வா எம் பொற்பாதமே.
பதமே
No comments:
Post a Comment