Wednesday, June 16, 2010

தமிழ் செம்மொழி மாநாடு இரங்கற்பா


இறப்பொக்கும் எல்லா உயிரும்
இறந்த பின்னர்
ஏது ஊரே.ஏ…ஏ…ஏ
யாவரும் சவங்கள்
உண்பது வரிசை
உடுப்பது கிழிசல்
உறைவிடமெங்கே முள்வேலி
செத்துப் பிழைத்தோ…தோ…தோம்
பிழைத்தும் சாவோம்…வோ…வோ…வோம்
தீதும் சூதும்
பிறர் தர வாழு எனும்
நன்மொழியே நம் பொன்மொழியாம்
அ..அ..ஆ…ஆ..ஆ…
சிறு குழந்தை முதல்
பேரிளம் பெண்களும் வரையிலே
உடம்பினை புணர்ந்து
கூறுபோடும்
விகாரைகள், மகா வம்சங்கள்
முள்வேலிக்குள் நீளும் கைகள்
ஒலிக்கின்ற அழுகுரலும்,வதைகளும்,
பசிக்கின்ற வயிறுகளும்,
மறைக்கின்ற அறிக்கைகளும்ம்ம்ம்ம்
அ..அ..ஆ…ஆ..ஆ…
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழியான தமிழ்மொழியாம்
அ..அ..ஆ…ஆ..ஆ…
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழி. செம்மொழி
தமிழ்மொழி தமிழ்மொழி அ..அ..ஆ…ஆ..ஆ…
குட்டிமணி முதல்
முத்துக்குமார் வரை
செத்துப் போனவர்
எத்தனையோ எத்தனையோ
ஓ…ஓ…ஓ…ஓ
ஓ…ஓ…ஓ…ஓ
இரண்டு லட்சம் பேர்
குருதியில் சிவந்த மொழி
எங்கள் மொழி தமிழ் மொழியாம்
செம்மொழியான
தமிழ் மொழியாம்ம்ம்ம்ம்ம்
அ..அ..ஆ…ஆ..ஆ…

Monday, May 17, 2010

எங்கள் அண்ணாக்கள் அக்காக்கள் எங்கே…???!

உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி
வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??!

களப்பலியாய் போனவர் போகட்டும்
அவர்களெம் மாவீரச் செல்வங்களாய்
எம்மோடு வாழ்வது உறுதி..!
ஆனால்..
சுதந்திர தேச வேட்கை கொண்டு வேங்கைகளாய்
உலா வந்த இந்த மானத் தமிழர்கள் தான் எங்கே..???!

கவிபாடும் தமிழ் சொல்லாலே
புலியெனப் பாய்ந்த
புதுக்கவிஞன் புதுவை அண்ணன் எங்கே..??!

“ஆழ்ந்து யோசி ஆராய்ந்து பேசு” என்ற சொல்லை வகுத்து
ஈரோஸின் பிறப்போடு உறவெடுத்து
புலிப் பாசறை புகுந்த அந்த அரசியல் வித்தகன்
பாலகுமாரன் அண்ணன் எங்கே..??!

திருநெல்வேலி முதற் தாக்குதலின் களப்பலி
அவன் பொன்னமான் தம்பி
தமிழீழ அரசியல் தத்துவஞானி
எங்கள் யாழ் இந்துவின் மைந்தன் யோகி அண்ணன் எங்கே..??!

இளம்பிறையாய் யாழ் வீதி எங்கும் ஓடோடி
அரசியல் கருத்துரைத்து
இளைய நெஞ்சங்களில் இடம்பிடித்த
அந்த இளம்பரிதி அண்ணன் எங்கே..??!

தெந்தமிழீழம் தந்த களத்தளபதி
இராணுவப் பேச்சாளன்
உலக ஊடகங்களின் கவனக் கவர்வான்
இளந்திரையன் அண்ணன் அவன் எங்கே..??!

தமிழீழத் தலைநகராம்
திருமலையின் நிர்வாகி
எழில் மிகு நகரின் தளபதி
எழிலன் அண்ணன் எங்கே…??!

இப்படி எத்தனையோ அண்ணாக்கள்
நேற்று வரை எம்மோடு உறவாடிய
எங்கள் பாச உறவுகள் எங்கே..??!
இனிய தமிழ் பேசி எம் இதயங்களில் வாழ்ந்த
தமிழினிய அக்காக்கள் எங்கே..??!

சிங்களச் சிறை சென்றாரோ
புத்த மைந்தன் மகிந்தவின்
சித்திரவதைக்கு இரையாகிப் போனாரோ..??!

சொந்தங்களை
விலைமதிப்பில்லா அந்தச் செல்வங்களை
தொலைத்துவிட்டுத் தேடுகிறேன்
எங்கள் உறவுகள் எங்கே..??!

கண்டவர் சொல்வரோ
காட்டிக் கொடுத்தோர் இரங்குவரோ..??!
இன்றேல்
மண் வாரி வசை பாடுவரோ
கல் வாரி என் தலை மீது விட்டு எறிவரோ…??!
எனக்குக் கவலை இல்லை..!
என் அண்ணன்கள் அக்காக்கள் எங்கே..??!

காலமே பதில் சொல்
நான் அவர்களை உயிரோடு
காண வேண்டும்
என் சுதந்திர தேசத்தின்
தேச பிதாக்களை
தரிசிக்க வேண்டும்..!

அவர்கள் மூச்சாய் வாழும்
தமிழீழக் காற்றே
தேடி வந்து ஒரு சேதி சொல்
என் சொந்தங்களைக்
கண்டதாய்.. உயிரற்ற உடலாய் அன்றி
உயிரோடு கண்டதாய் சொல்..!
காத்திருக்கிறேன்..
விழி எங்கும் நீர் நிறைய…!!!


நன்றி குருவிகளே
http://kuruvikal.wordpress.com/

Friday, January 8, 2010

மன்னனாய் முடி சூட வர வேண்டும்..!!


இனிய புன்னகையுடன் எம்மோடு,,
இரண்டறக்கலந்த தானைத்தலைவனே...!!!

கம்பீர நடைக்கு சொந்தமான கரிகாலனே..!!
கண்ணான எங்கள் காவல் தலைவனே...!!

மதியூக சக்கரவர்த்தியே...!!
மக்கள் மனங்களில் வாழ்ந்தது கொண்டிருக்கும்
மன்னாதி மன்னனே...!!

வல்லமையின் தோன்றலே...!!
வல்வெட்டித்துறையின் மைந்தனே...!!

தமிழீழ மக்களின் பொக்கிஷமே...!!
தமிழர்கள் போற்றும் தங்கத்தலைவனே..!!

சிங்களவனுக்கு பேரிடி கொடுத்த...முழக்கமே...!!
சிரிப்பிலே பதில் சொல்லிடும் செம்மலே..!!

தமிழனைத்தலை நிமிர வைத்த மறவனே...!!
தங்கத்தமிழீழ முதல்வனே..!!

தரணி எங்கும் உன் புகழ் ஒலிக்குதே...
தன்மானத்தமிழனே...!!
உன் நாமம் வாழுமே...என்றென்றும்..
உயிரிலே கலந்த தெய்வமே...!!

துரோகங்களை தாங்கிய அஞ்சா நெஞ்சனே..!!
துணிவினை ஊட்டி போராட,, வைத்த தெய்வமே..!!

வீரத்தின் புது இலக்கணமே...!!
விஷ்வரூபம் எடுத்து விரைவில் வர வேண்டும் ..!!

விதண்டாவாதம் பேசும் விஷக்கிருமிகளின் பேச்சினை அடக்க
விரைவாக வந்திட வேண்டும்..!!

மலர போகின்ற தமிழீழத்திற்கு,,
மன்னனாய் முடி சூட வர வேண்டும்..!!

சோழ பரம்பரை வழி வந்த தேசியத்தலைவா...!!
சோகம் நீக்கிட நீங்கள் வர வேண்டும்..!!

உங்களின் குரல் கேட்க.., ஊசலாடும் உயிரோடும்,
உணர்வோடும் காத்திருக்கும்,,
உங்கள் அன்பின் தழிழீழ மக்கள்.... (நன்றி - வன்னிஆன்லைன்.காம்)


தமிழீழ மக்கள் மட்டுமல்ல தமிழகத்திலிருந்தும் இது தான் எங்கள் வேண்டுதல்

- தமிழன்

Wednesday, November 25, 2009

அன்பு தலைவா உன்னால் நாங்கள் உய்வுற்றோம் தாழ்ந்த தலை நிமிர உன் வழி காட்டல் தேவை தமிழன் நிமிர தமிழ் உயர தமிழ் தலைவன் உன் ஆயுள் பல நுறை தாண்ட எம் ஆயுளையும் தருவோம் நீங்கள் நீண்ட ஆயுளும் திடமான வலுவான உடல்நலமும் பெற உண்மையையும் சத்தியத்தையும் வேண்டுகிறோம்

Tuesday, November 24, 2009

தமிழ் வெல்ல பணி செய்வோம்!

நள்ளிரவில் காதிலெழும் நாதமணிப் பேரொலியில்
நாளை ஒரு பூ மலரும்
நல்ல சுடர் ஏற்றி வைத்து - நாங்கள்
தொழும் போதினிலே
நம்பும்!
நம் எதிரிச் சேனை வீழும்
பள்ளிகொள்ளும் வீரரது கல்லறையில் கண் சொரிந்து
மணி ஒலிகள் ஒலி எழுப்பி
மாவீரர் புகழ் பாட
தலைவன் உரை முடிந்தவுடன்
தமிழீழம் மலர்ந்ததென்று
தரணியெங்கும் வானுயர்ந்த புலிக்கொடிகள்
தலை நிமிர்ந்து ஆசைந்து ஆட
உள்ளம் உருகி, உணர்வோடு
உத்தமர்கள் துயிலுகின்ற
கல்லறையில்
நாங்கள்
கார்த்திகைப் பூச் சொரிந்து
தேசியத்தின் உயிரானவர்கள்
தேசத் தலைவனுடன்....செய்த பெரும்
ஈகமதை
பாடித் தினம் போற்றி
பாரெல்லாம்
தமிழ் வெல்ல
பணி செய்வோம்!


நன்றி - இன்போ தமிழ்

Saturday, November 21, 2009

மாவீரர் நினைவுகூறல் இன்றிலிருந்து ஆரம்பம்


மண்ணை நேசித்த மானமாவீரர்களுக்கு எங்கள் வீர வணக்கம்

Thursday, November 19, 2009

தீயில் வெந்த தியாகமே


தீயில் வெந்த தியாகமே
இந்நாளில் உன்னை நினைத்து
உள்ளுறுதியை மேலும்
உரமேற்றுவோம்


தீராது தாயக விடுதலை தாகம் அதை அடையும் வரை
குறையாது எங்கள் வேகம்